பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு. நரேந்திர மோடி, இலங்கை அதிபர் திரு. கோத்தபய ராஜபக்சே இடையே தொலைபேசி உரையாடல்

प्रविष्टि तिथि: 13 MAR 2021 3:22PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, இலங்கை அதிபர் திரு. கோத்தபய ராஜபக்சேவுடன் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

தற்போதைய நிகழ்வுகளின் வளர்ச்சி, இரு தரப்பு மற்றும் பலதரப்பு மன்றங்களில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு ஆகியவை பற்றி இரு தலைவர்களும் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடரும் கொவிட்-19 சவால்கள் உள்ளிட்ட விஷயங்களில் சம்பந்தப்பட்ட இருதரப்பு அதிகாரிகள் இடையே அவ்வப்போது தொடர்பை தொடர்ந்து மேற்கொள்ள அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

அண்டை நாடு முதலில் என்ற இந்தியாவின் கொள்கையில் இலங்கையின் முக்கியத்துவத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

                                                                           -----


(रिलीज़ आईडी: 1704621) आगंतुक पटल : 344
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada