சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாடு முழுவதும் 2.4 கோடிக்கும் அதிகமான தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன; தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன
प्रविष्टि तिथि:
10 MAR 2021 12:09PM by PIB Chennai
இன்று காலை 7 மணி வரையிலான தற்காலிக அறிக்கையின் படி, நாடு முழுவதும் 3,39,145 அமர்வுகளில் 2.4 கோடிக்கும் அதிகமான (2,43,67,906) தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில், 71,30,098 சுகாதாரப் பணியாளர்கள் (முதல் முறை), 38,90,257 சுகாதாரப் பணியாளர்கள் (இரண்டாம் முறை), 69,36,480 முன்கள பணியாளர்கள் (முதல் முறை), 4,73,422 முன்கள பணியாளர்கள் (இரண்டாம் முறை), 45 வயதுக்கு மேற்பட்ட குறிப்பிட்ட இணை நோய் தன்மைகள் உடைய 8,33,526 நபர்கள் (முதல் முறை) மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 51,04,123 பயனாளிகள் (முதல் முறை) அடங்குவர்.
தடுப்பு மருந்து வழங்குதல் நடவடிக்கையின் 53-வது நாளான 2021 மார்ச் 9 அன்று, 13,59,173 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இவர்களில், 10,60,944 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு 52 ஆயிரத்து 351 அமர்வுகளில் முதல் டோஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. 2,98,229 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது.
மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் அதிக அளவில் கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 17,921 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 83.76 சதவீதம் மேற்கண்ட ஆறு மாநிலங்களில் இருந்து பதிவாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் 9,927 பாதிப்புகளும், கேரளாவில் 2,316 தொற்றுகளும், பஞ்சாபில் 1,027 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை 1,84,598 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை 22,34,79,877 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1703702
*****************
(रिलीज़ आईडी: 1703860)
आगंतुक पटल : 240