பிரதமர் அலுவலகம்
இந்தியா - பங்களாதேஷ் இடையே ‘மைத்ரி சேது’ பாலத்தை பிரதமர் மார்ச் 9ம் தேதி தொடங்கி வைக்கிறார்
திரிபுராவில் பல்வேறு நல திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்
Posted On:
07 MAR 2021 7:47PM by PIB Chennai
இந்தியா - பங்களாதேஷ் இடையே ‘மைத்ரி சேது’ பாலத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி 2021 மார்ச் 9ம் தேதி மதியம் 12 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில், திரிபுராவில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.
இந்திய எல்லையில் திரிபுரா மாநிலம் மற்றும் பங்களாதேஷ் இடையே ஃபென்னி ஆற்றின் குறுக்கே மைத்ரி சேது பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையே இருதரப்பு மற்றும் நட்பு றவை ‘மைத்ரி சேது’ பெயர் குறிக்கிறது. இந்த பால கட்டுமானத்தை, தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கார்பரேஷன் நிறுவனம் ரூ.133 கோடி செலவில் மேற்கொண்டது.
1.9 கி.மீ நீளமுள்ள இந்த பாலம் இந்தியாவின் சப்ரூம் மற்றும் பங்களாதேஷின் ராம்கர் ஆகிய பகுதிகளை இணைக்கிறது.
இந்தியா - பங்களாதேஷ் இடையே வர்த்தகம் மற்றும் மக்கள் போக்குவரத்தில் புதிய அத்தியாயத்தை அறிவிக்க இது தயாராக உள்ளது.
இந்த தொடக்கத்துடன், வடகிழக்கின் நுழைவு வாயிலாக திரிபுரா மாறவுள்ளது. சப்ரூம் பகுதியிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள பங்களாதேஷின் சித்தாகாங் துறைமுகத்துக்கு எளிதாக செல்ல முடியும்.
சப்ரூம் பகுதியில், ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
இரு நாடுகளுக்கும் இடையே மக்கள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து எளிதாக நடைபெற இது உதவும்.
வட கிழக்கு மாநிலங்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் ஏற்படும். இந்தியா - பங்களாதேஷ் இடையே தடையற்ற போக்குவரத்துக்கு இது உதவும். இத்திட்டத்தை இந்திய தரைவழி முனையம் ஆணையம் ரூ.232 கோடி செலவில் அமைக்கிறது.
கைலாசாகரில் உள்ள யுனகோட்டி மாவட்ட தலைமையகத்தை, கோவாய் மாவட்ட தலைமையகத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 208-க்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இது தேசிய நெடுஞ்சாலை 44-க்கு மாற்று வழியாகவும் இருக்கும்.
80 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலை 208 திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கார்பரேஷன் நிறுவனம் ரூ.1078 கோடி செலவில் மேற்கொள்கிறது.
திரிபுரா அரசு ரூ.63.75 கோடி செலவில் உருவாக்கிய மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் இதர மாவட்ட சாலைகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
இவை திரிபுரா மக்களுக்கு, அனைத்து காலநிலைக்கும் ஏற்ற போக்குவரத்து இணைப்பை வழங்கும்.
பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.813 கோடி செலவில் கட்டப்பட்ட 40,978 வீடுகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். அகர்தலா ஸ்மார்ட் நகர திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
மேலும், பழைய மோட்டார் ஸ்டாண்ட் பகுதியில் பல அடுக்கு கார் நிறுத்துமிடம், வர்த்தக வளாகம் கட்டுவதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இது ரூ.200 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது.
லிச்சுபகன் என்ற இடத்திலிருந்து விமானம் நிலையம் வரையுள்ள இருவழி சாலை, 4 வழி சாலையாக அகலப்படுத்தும் திட்டத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இந்தப் பணி, அகர்தலா ஸ்மார்ட் நகர திட்டத்தின் கீழ் ரூ.96 கோடி செலவில் அமல்படுத்தப்படுகிறது.
**************
(Release ID: 1703524)
Visitor Counter : 242
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam