பிரதமர் அலுவலகம்

சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்கள் சக்திக்கு பிரதமர் மரியாதை

Posted On: 08 MAR 2021 9:18AM by PIB Chennai

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெல்ல முடியாத பெண்கள் சக்தியை பிரதமர் திரு நரேந்திர மோடி வணங்கியுள்ளார்.

இதுதொடர்பான சுட்டுரைச் செய்தியில், “சர்வதேச மகளிர் தினத்தன்று வெல்ல முடியாத பெண்கள் சக்தியை வணங்குகிறேன். நமது நாட்டு பெண்களின் ஏராளமான சாதனைகளை எண்ணி இந்தியா பெருமை கொள்கிறது.

பல்வேறு துறைகளில் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக பணியாற்றும் வாய்ப்பு  கிடைத்திருப்பது நமது அரசுக்குக் கிடைத்த கவுரவம்”, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

------


(Release ID: 1703247) Visitor Counter : 162