பிரதமர் அலுவலகம்

குஜராத் கெவாடியாவில் நடந்த ஒருங்கிணைந்த ராணுவ கமாண்டர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் உரை

Posted On: 06 MAR 2021 8:40PM by PIB Chennai

குஜராத் கெவாடியாவில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்த, ஒருங்கிணைந்த ராணுவ கமாண்டர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

இந்த மாநாட்டின் போது, விவாதங்கள் பற்றி பிரதமருக்கு, முப்படை தலைமை தளபதி எடுத்துக் கூறினார்.

இந்த மாநாட்டின் அமைப்பு மற்றும் கொள்கைக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்இந்தாண்டு மாநாட்டில் அனைத்து பிரிவு அதிகாரிகளையும் சேர்த்ததை அவர் பாராட்டினார்.

தேசிய பாதுகாப்பு அமைப்பின் சிவில் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளிடம் பேசிய பிரதமர், கொவிட் தொற்று மற்றும் வடக்கு எல்லையில் நிலவிய சவாலான சூழலில், இந்திய பாதுகாப்பு படைகள் கடந்த ஓராண்டாக அர்ப்பணிப்புடன் பணியாற்றியதை வெகுவாக பாராட்டினார்

தேசிய பாதுகாப்பு அமைப்பில் உள்நாட்டுமயத்தை அதிகரிப்பதை வலியுறுத்திய பிரதமர், சாதனங்கள் மற்றும் ஆயுதங்களில் மட்டும் அல்ல பாதுகாப்பு படைகளின் போதனைகள், நடைமுறைகள், மற்றும் பழக்க வழக்கங்களிலும்  உள்நாட்டுமயம் இருக்க வேண்டும் என்றார்

தேசிய பாதுகாப்பு கட்டமைப்பில் ராணுவம் மற்றும் ராணுவம் அல்லாத பிரிவுகளிலும் மனிதசக்தி திட்டங்களை  அதிகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.  

பொதுமக்கள்-ராணுத்தினர் இடையேயான வேறுபாடுகளை தீர்ப்பது, விரைவாக முடிவெடுப்பது போன்றவற்றில் முழுமையான அணுகுமுறையுடன் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள்  விடுத்தார்

பயன்பாடு மற்றும் பொருத்தம் இல்லாத மரபு முறைகளில் இருந்து, வெளிவர வேண்டும் எனவும் பாதுகாப்பு படை பிரிவுகளுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்

தொழில்நுட்ப சூழல் வேகமாக மாறிவருவதை குறிப்பிட்ட பிரதமர், எதிர்காலத்துக்கு ஏற்ற படையாக இந்திய ராணுவத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நாட்டின் 75வது சுதந்திர தினம் அடுத்தாண்டு கொண்டாடப்படவுள்ளதை சுட்டிக் காட்டிய பிரதமர், இளைஞர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளை பாதுகாப்பு படைகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

------



(Release ID: 1703041) Visitor Counter : 244