பிரதமர் அலுவலகம்

மார்ச் 5 அன்று நடைபெறவுள்ள செராவீக் 2021 நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றவுள்ள பிரதமர், செராவீக் சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருதையும் பெறவிருக்கிறார்

Posted On: 04 MAR 2021 6:10PM by PIB Chennai

செராவீக் (காம்பிரிட்ஜ் எரிசக்தி ஆராய்ச்சி கூட்டாளிகள் வாரம்) 2021 நிகழ்ச்சியில் மார்ச் 5 அன்று மாலை 7 மணிக்கு காணொலி மூலம் சிறப்புரை ஆற்றவுள்ள பிரதமர், செராவீக் சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருதையும் பெறவிருக்கிறார்

செராவீக் பற்றி:

டாக்டர் டேனியல் யெர்கின் என்பவரால் 1983-ம் ஆண்டு செராவீக் நிறுவப்பட்டது. அந்தாண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஹூஸ்டனில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, உலகின் முன்னணி வருடாந்திர எரிசக்தி தளமாக கருதப்படுகிறது.

2021 மார்ச் 1 முதல் 5 ஆம் தேதி வரை காணொலி மூலம் செராவீக் நடைபெறுகிறது

விருது குறித்து:

செராவீக் சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது 2016-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

சர்வதேச எரிசக்தியின் வருங்காலம் மற்றும் சூழலியலுக்கான தலைமைத்துவ உறுதியையும், எரிசக்திக்கான அணுகல், குறைந்த விலையில் கிடைக்க செய்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தீர்வுகள் மற்றும் கொள்கைகள் வழங்குதலையும் இது அங்கீகரிக்கிறது.

***************


(Release ID: 1702524) Visitor Counter : 227