சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

வயது சார்ந்த குழுக்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குதல் குறித்த கூட்டத்திற்கு மத்திய சுகாதார செயலாளர் மற்றும் தடுப்பு மருந்து நிர்வாகத்திற்கான அதிகாரம் பொருந்திய குழுவின் தலைவர் தலைமை வகித்தனர்

Posted On: 26 FEB 2021 3:15PM by PIB Chennai

வயது சார்ந்த குழுக்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குதல் குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசிப்பதற்காக காணொலி மூலம் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திற்கு மத்திய சுகாதார செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் மற்றும் தடுப்பு மருந்து நிர்வாகத்திற்கான (கோ-வின்) அதிகாரம் பொருந்திய குழுவின் தலைவரும், கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலுக்கான தேசிய நிபுணர் குழுவின் (நெக்வாக்) உறுப்பினருமான டாக்டர் ஆர் எஸ் சர்மா இன்று தலைமை வகித்தனர்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத் துறை செயலாளர்கள் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் நிர்வாக இயக்குநர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நாடு தழுவிய கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கை 2021 ஜனவரி 16 அன்று தொடங்கிய நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இதர நோய்த்தன்மை உடையவர்களுக்கும் 2021 மார்ச் 1 முதல் இது விரிவுபடுத்தப்படவுள்ளது.

ஆரம்ப சுகாதார மையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நல மையங்கள் போன்ற அரசு மையங்களிலும், மத்திய அரசின் சுகாதார திட்டம் மற்றும் இதர இத்திட்டங்களில் இணைந்துள்ள தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பு மருந்து வழங்கப்படும்.

தனியார் மையங்களில் விதிமுறைகளின் படி அனைத்து வசதிகளும் உள்ளனவா என்றும், அரசு வகுத்துள்ள வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்றும் உறுதி செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன.

அனைத்து அரசு மையங்களிலும் தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும். புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (ஆதார் அல்லது வாக்காளர் அட்டை வரவேற்கப்படுகிறது) மற்றும் இதர நோய்த்தன்மை சான்றிதழ் (தேவைப்படின்) ஆகியவற்றை பயனாளிகள் காண்பிக்க வேண்டும்.

தனியார் மையங்களில் தடுப்பு மருந்து பெறுவோர் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1701053

*****************

(Release ID: 1701053)

 



(Release ID: 1701175) Visitor Counter : 250