சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோ-வின் டிஜிட்டல் தளம் மேம்பாடு பணி காரணமாக பிப்ரவரி 27 மற்றும் 28ம் தேதிகளில் கொவிட் 19 தடுப்பூசிகள் போடப்படாது

Posted On: 26 FEB 2021 12:27PM by PIB Chennai

கொவிட் தடுப்பூசி போடும் திட்டத்தை மாண்புமிகு பிரதமர் கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கி வைத்தார்.

 நாடு முழுவதும் கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிமார்ச் 1ம் தேதியிருந்து, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டஇதர உடல்நல பிரச்சனை உள்ளவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

இதற்காக கொவிட் 19 தடுப்பூசி போடப்படுவதை கண்காணிக்கும், கோ-வின் டிஜிட்டல் தளம் மேம்படுத்தப்படுகிறது.

கோவின் 1.0-விலிருந்து கோ-வின் 2.0-வுக்கு மாறுவதால், வரும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் (பிப்ரவரி 27 மற்றும் 28) தேதிகளில் கொவிட்-19 தடுப்பூசி போடும் நிகழ்வுகள் நடக்காது. இந்த மாற்றம் குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

*****************


(Release ID: 1701045) Visitor Counter : 261