பிரதமர் அலுவலகம்

திரு மண்ணாத்து பத்மநாபனின் நினைவு நாளில் பிரதமர் அவருக்கு அஞ்சலி

இடுகை இடப்பட்ட நாள்: 25 FEB 2021 10:32AM by PIB Chennai

திரு மண்ணாத்து பத்மநாபனின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “திரு மண்ணாத்து பத்மநாபனின் நினைவு நாளன்று அவருக்கு எனது அஞ்சலிகள். சமூக நலனுக்கும் இளைஞர்களின் வளர்ச்சிக்காகவும் அவரது நெடுங்கால பங்களிப்பை நாம் நினைவு கூர்கிறோம். அவரது வளமான சிந்தனைகள் ஏராளமானோருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன”, என்று தெரிவித்துள்ளார்.

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1700740) வருகையாளர் எண்ணிக்கை : 190