பிரதமர் அலுவலகம்
`பரிக்ஷா பே சார்ச்சா 2021’ நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் உரையாடவிருக்கிறார்
Posted On:
18 FEB 2021 3:16PM by PIB Chennai
`பரிக்ஷா பே சார்ச்சா 2021’ நிகழ்ச்சியின்போது உலகெங்கும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாடுவார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்திகளில், “நமது துணிச்சல் மிக்க தேர்வெழுதும் போர்வீரர்கள், தங்களது தேர்விற்குத் தயாராகி வரும் வேளையில், உலகெங்கும் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளும் வகையில் காணொலி வாயிலாக `பரிக்ஷா பே சார்ச்சா 2021’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மன உளைச்சல் அல்லாமல், புன்னகையுடன் தேர்வை எதிர் கொள்ளலாம், வாருங்கள்!
பல்வேறு கோரிக்கைகளுக்கேற்ப, `பரிக்ஷா பே சார்ச்சா 2021’ நிகழ்ச்சியில் பெற்றோரும், ஆசிரியர்களும் கலந்து கொள்வார்கள். பொதுவாக தீவிரமான தலைப்பாக இருந்த போதும், வேடிக்கைகள் நிறைந்த விவாதமாக இது அமையும். எனது மாணவ நண்பர்கள், அவர்களது அற்புதமான பெற்றோர்கள், கடுமையாக உழைக்கும் ஆசிரியர்கள் ஆகியோர் பெருமளவில் `பரிக்ஷா பே சார்ச்சா 2021’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக, பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியான “பரிக்ஷா பே சார்ச்சா 1.0”, கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி புதுதில்லியில் உள்ள டால்கடோரா மைதானத்தில் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவர்களுடனான “பரிக்ஷா பே சார்ச்சா 2.0” கலந்துரையாடல் நிகழ்ச்சியும் புதுதில்லியின் டால்கடோரா மைதானத்தில் 2019-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி நடைபெற்றது. மூன்றாவது ஆண்டாக பள்ளி மாணவர்களுடன் நடைபெற்ற “பரிக்ஷா பே சார்ச்சா 2020” கலந்துரையாடல் நிகழ்ச்சியும் புதுதில்லியின் டால்கடோரா மைதானத்தில் 2020-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற்றது.
******
(Release ID: 1699049)
Visitor Counter : 197
Read this release in:
Telugu
,
Bengali
,
Assamese
,
Odia
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Malayalam