பிரதமர் அலுவலகம்

ஓமன் சுல்தான் மேதகு ஹைதம் பின் தாரிக்-வுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி தொலைபேசி உரையாடல்

இடுகை இடப்பட்ட நாள்: 17 FEB 2021 9:20PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஓமன் நாட்டு சுல்தான் மேதகு சுல்தான் ஹைதம் பின் தாரிக்-வுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.

ஓமன் நாட்டுக்கு கொவிட்-19 தடுப்பு மருந்துகளை இந்தியா விநியோகித்ததற்காக சுல்தான் அவரைப் பாராட்டினார். பெருந்தொற்றுக்கு எதிராக இணைந்து போராடுவதற்கான ஒத்துழைப்பை தக்க வைத்துக் கொள்வது என இரண்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

தமது ஆட்சியின் ஓராண்டை நிறைவு செய்ததற்காகவும், ஓமன் நாட்டிற்கான 2040 தொலை நோக்குப் பார்வைக்காகவும் பிரதமர் சுல்தானுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பாதுகாப்பு, சுகாதாரம், வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இந்திய-ஓமன் ஒத்துழைப்பு வளர்ந்து வருவது குறித்து இருவரும் திருப்தி தெரிவித்தனர்.

இரண்டு உத்திசார் கூட்டாளிகளுக்கு இடையேயான பொருளாதார, பண்பாட்டு உறவுகளை மேம்படுத்தி வரும் புலம் பெயர்ந்த இந்தியர்களின் பங்கினை இரண்டு தலைவர்களும் பாராட்டினர்.


(வெளியீட்டு அடையாள எண்: 1698964) வருகையாளர் எண்ணிக்கை : 145