சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட் உயிரிழப்பு தொடர்ந்து சரிவு: தினசரி உயிரிழப்பு 100-க்கும் கீழாக குறைந்தது
प्रविष्टि तिथि:
14 FEB 2021 11:53AM by PIB Chennai
இந்தியாவில் கொவிட் உயிரிழப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 92 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழப்பு வீதம் 1.5 (1.43%) சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. இது உலகிலேயே மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 1.06 கோடி பேர் (1,06,11,731) குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 11,016 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் வீதம் 97.31 சதவீதமாக உள்ளது.
இன்று காலை 8 மணி வரை, நாட்டில் 82 லட்சம் (82,63,858) சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவது நேற்று தொடங்கப்பட்டது.
29வது நாளான நேற்று, 2,96,211 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவர்களில் 23,628 சுகாதார பணியாளர்கள் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 1.37 (1,37,567) லட்சமாக குறைந்துள்ளது.
தினசரி கொவிட் பாதிப்பு, கேரளாவில் தொடர்ந்து அதிகளவில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 5,471 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இரண்டாவதாக மகாராஷ்டிராவில் 3,611 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 477 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697885
*******
(रिलीज़ आईडी: 1697923)
आगंतुक पटल : 231