சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
80 லட்சம் பயனாளிகளுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள்; 8 மாநிலங்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது
Posted On:
13 FEB 2021 11:27AM by PIB Chennai
கொவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில் 80 லட்சம் தடுப்பூசிகளை இந்தியா செலுத்தியுள்ளது.
பிப்ரவரி 13, 2021 காலை 8 மணி வரை, தமிழகத்தில் 2,27,542 பேர், புதுச்சேரியில் 5,510 பேர் உட்பட, நாடு முழுவதும் சுமார் 80 லட்சம் பேருக்கு (79,67,647) கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் 28-வது நாளில் (பிப்ரவரி 12, 2021) 94,160 சுகாதாரப் பணியாளர்களுக்கும், 10,411 முன்கள ஊழியர்களுக்குமாக மொத்தம் 4,62,637 பயனாளிகளுக்கு, 10,411 முகாம்களில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
8 மாநிலங்களில பதிவு செய்த சுமார் 60 சதவீத (59.70%) சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த 8 மாநிலங்களில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த பயனாளிகளில் 10.8 சதவீதத்தினர் (8,58,602), உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,36,571 ஆக பதிவாகியுள்ளது. இது மொத்த பாதிப்பில் வெறும் 1.25 சதவீதம் மட்டுமே ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 12,143 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11,395 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.06 கோடியாக (1,06,00,625) அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் சதவீதம் 97.32 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து கேரளாவில் அதிகபட்சமாக 5,397 பேரும், மகாராஷ்டிராவில் 3,670 பேரும், தமிழ்நாட்டில் 483 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 103 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697651
--------
(Release ID: 1697728)
Visitor Counter : 251
Read this release in:
Odia
,
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu