பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

அசாம் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உர நிறுவனத்துக்கு ரூ.100 கோடி மானிய உதவி : பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்

Posted On: 10 FEB 2021 3:06PM by PIB Chennai

யூரியா உற்பத்திப் பிரிவுகளின் செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக அசாம் நம்ருப் பகுதியில் உள்ளபிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உரம் கார்பரேஷன் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி மானிய உதவி அளிக்கும், உரத்துறையின்  திட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்தது.

கம்பெனிகள் சட்டப்படி, மத்திய அரசின் உரத்துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமாக பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு உரம் கார்பரேஷன்  உள்ளதுதற்போது, இந்நிறுவனத்தில், நம்ருப்-2, நம்ருப்-3 என்ற இரண்டு பழமையான  ஆலைகள் உள்ளனஎரிவாயு அடிப்படையிலான முதல் யூரியா உற்பத்தி ஆலையாக இருந்தும், இதற்குத் தேவையான அனைத்து கட்டமைப்பும், பொருட்களும் கிடைத்தாலும், பழமையான தொழில்நுட்பம் காரணமாக, நியாயமான உற்பத்தி அளவை பராமரிப்பது சிரமமாக உள்ளதுபாதுகாப்பான முறையில், இதை தொடர்ந்து செயல்படுத்த, சில சாதனங்கள் மற்றும் இயந்திரங்களை மாற்ற வேண்டியுள்ளதுபழுதுபார்க்க வேண்டியுள்ளது. இந்த ஆலைகளை தொடர்ந்து சுமுகமாக இயக்குவதற்கு, சில இயந்திரங்கள், எலக்ட்ரிக்கல், சாதனங்கள் கொள்முதலுடன் குறைந்தபட்ச பழுது பார்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். இதற்கு ரூ.100 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு உரம் கார்பரேஷன் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி மானிய உதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696734

******

 



(Release ID: 1696769) Visitor Counter : 221