சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொரோனா பாதிப்பு : 19 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் அன்றாட உயிரிழப்புகள் இல்லை; 66 லட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசிகள்

Posted On: 10 FEB 2021 11:57AM by PIB Chennai

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.41 லட்சமாகக் (1,41,511)  குறைந்துள்ளது.

தேசிய அளவைப் போலவே 33 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 5000-க்கும் குறைவானோர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். டாமன் டையூ, தாத்ரா நாகர் ஹவேலியில் எந்த பாதிப்பும் பதிவாகவில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் 11,067 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13,087 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டின் தற்போதைய பாதிப்பில் 71% கேரளா, மகாராஷ்டிராவில் மட்டுமே பதிவாகியுள்ளது.

19 மாநிலங்களிலும் யூனியன்  பிரதேசங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,05,61,608 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97.27 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 

பிப்ரவரி 10, 2021 காலை 8 மணி வரை, தமிழகத்தில் 1,85,577 பேர், புதுச்சேரியில் 4,301 பேர் உட்பட, நாடு முழுவதும் 66 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு (66,11,561) கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

56,10,134 சுகாதாரப் பணியாளர்களுக்கும், 10,01,427 முன்கள ஊழியர்களுக்கும் 1,34,746  முகாம்களில்  தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் 25-ஆம் நாளில் (பிப்ரவரி 9, 2021) 7,990 முகாம்களில் 3,52,553 பயனாளிகளுக்கு (சுகாதார பணியாளர்கள்- 1,28,032,  முன்கள ஊழியர்கள்- 2,24,521) நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து கேரளாவில் அதிகபட்சமாக 5,214 பேரும், மகாராஷ்டிராவில் 2,515 பேரும், தமிழ்நாட்டில் 469 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 94 உயிரிழப்புகள்  ஏற்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696691

*****



(Release ID: 1696756) Visitor Counter : 184