சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

20 கோடி கொவிட்-19 பரிசோதனைகளுடன் புதிய சாதனையை இந்தியா படைத்துள்ளது

Posted On: 06 FEB 2021 12:04PM by PIB Chennai

இருபது கோடிக்கும் அதிகமான (20,06,72,589) கொவிட்-19 பரிசோதனைகளை இது வரை மேற்கொண்டு புதிய சாதனையை இந்தியா படைத்துள்ளது.

 கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,40,794 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

பரிசோதனை உள்கட்டமைப்பு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டதன் மூலம் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, புதிய தொற்றுகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. 2369 ஆய்வகங்கள் நாடு முழுவதும் செயல்படுகின்றன.

தற்போது பாதிப்பில் உள்ளோரின் எண்ணிக்கை 1.5 லட்சத்துக்கும் குறைவாக (1,48,590) உள்ளது. கடந்த 8 மாதங்களில் இதுவே குறைவான அளவாகும்.

மேலும், இது வரை உறுதி செய்யப்பட்ட மொத்த பாதிப்புகளில் இது வெறும் 1.37 சதவீதம் ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 95 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். தடுப்பு மருந்து வழங்கலை பொருத்தவரை, இன்று காலை 8 மணி வரை, மொத்தம் 54 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு (54,16,849) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதில், தமிழகத்தில் மட்டும் 1,57,324 பேருக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

வெறும் 21 நாட்களில் 50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது உலக சாதனையாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,57,404 பேருக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

 

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1695748



(Release ID: 1695807) Visitor Counter : 173