சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மொத்த உயிரிழப்புகளைவிடக் குறைவு

प्रविष्टि तिथि: 05 FEB 2021 11:55AM by PIB Chennai

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைகிறது.

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை  இன்று 1.51 லட்சமாக (1,51,460) குறைந்தது. இது இன்று வரை பதிவான மொத்த உயிரிழப்புகளைவிட (1,54,823) குறைவு. கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, மொத்த பாதிப்பில் 1.40 சதவீதமாக உள்ளது.

இந்தியாவின் தினசரி தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 12, 408 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

2021 பிப்ரவரி 5ம் தேதி காலை 8 மணிவரை  சுமார் 50 லட்சம் பேருக்கு (49,59,445) கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 1,45,928 பேருக்கும், புதுச்சேரியில் 3,222 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 5,09,893 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இது வரை 1.04 கோடி பேர் (1,04,96,308) குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 15,853 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர்  வீதம் 97.16 சதவீமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 120 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695415

                                                                                                          ***


(रिलीज़ आईडी: 1695575) आगंतुक पटल : 203
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam