வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

தில்லி மத்திய வழித்தட பகுதிக்கான பூமி பூஜை தொடக்கம்

Posted On: 04 FEB 2021 12:26PM by PIB Chennai

தில்லியில் உள்ள மத்திய வழித்தடப்  பகுதி மேம்பாட்டுக்கான (Central Vista Avenue ) பூமி பூஜையை, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவாகரத்துறை இணையமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, புதுதில்லி இந்தியா கேட் பகுதியில் இன்று தொடங்கி வைத்தார். இந்த விழாவுடன் தில்லி மத்திய வழித்தட மேம்பாட்டுப் பணிகள் தொடங்குகின்றன. வடக்கு மற்றும் தெற்கு பிளாக் பகுதியிலிருந்து ராஜ பாதையை உள்ளடக்கிய இந்தியா கேட் வரை மற்றும் அதனையொட்டியுள்ள புல்வெளிகள், வாய்கால்கள், மரங்கள், விஜய் சவுக் மற்றும் இந்தியா கேட் பிளாசா வரை 3 கி.மீ நீள பகுதி மேம்படுத்தப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், வைஸ்ராய் இல்லம் வரை, இது மிகப் பெரிய ஊர்வலப் பாதையாக இருக்கும் வகையில் வடிமைக்கப்பட்டது. இந்த மத்திய வழித்தட பகுதியை புதுப்பொலிவுடன்  மேம்படுத்த  மத்திய அரசு முடிவு செய்தது. இதை புதிய இந்தியாவுக்கு ஏற்ற அடையாளமாக மாற்றுவதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இப்பகுதியை ரூ.608 கோடி செலவில் மேம்படுத்த மத்திய அரசு கடந்தாண்டு நவம்பர் 10-ம் தேதி ஒப்புதல் அளித்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695064

*****

(Release ID: 1695064)



(Release ID: 1695109) Visitor Counter : 139