நிதி அமைச்சகம்

மூலதன செலவுக்கு ரூ.5.54 லட்சம் கோடி: 34.5 சதவீதம் அதிகம்

இடுகை இடப்பட்ட நாள்: 01 FEB 2021 2:01PM by PIB Chennai

மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மூலதன செலவுக்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ.5.54 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என அறிவித்தார். இது கடந்த நிதியாண்டு பட்ஜெட் மதிப்பீட்டை விட 34.5 சதவீதம் அதிகம். கடந்த நிதியாண்டில் மூலதன செலவு ரூ.4.12 லட்சம் கோடியாக இருந்தது.

நிதி நெருக்கடி நிலையிலும், மூலதன செலவுக்கு அதிகம் செலவு செய்ய மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். 2020-21ம் நிதியாண்டில் மூலதன செலவு ரூ.4.39 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார விவாகரத்துறையின் மூலதன பட்ஜெட்டில் ரூ.44 ஆயிரம் கோடி உள்ளது எனவும், அவை நல்ல முன்னேற்றம் உள்ள மூலதன செலவு திட்டங்களுக்கு வழங்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார். 

மூலதன செலவுகளுக்காக, மாநிலங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளுக்கு ரூ.2 லட்சம் கோடி வழங்கப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் அறிவித்தார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693903


(வெளியீட்டு அடையாள எண்: 1694114) வருகையாளர் எண்ணிக்கை : 275
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Punjabi , Urdu , Marathi , Bengali , Gujarati , Malayalam