நிதி அமைச்சகம்
ஒற்றை பங்குச்சந்தை விதிமுறை அறிமுகம்
Posted On:
01 FEB 2021 1:58PM by PIB Chennai
செபி சட்ட விதிமுறைகள், வைப்புத் தொகை சட்டம், பங்குகள் ஒப்பந்தம் ஒழுங்குமுறை சட்டம், அரசு பங்குகள் சட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, விவேகமான ஒற்றை பங்குச்சந்தை விதிமுறையை மத்திய அரசு கொண்டு வரும் என நிதிநிலை அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம்(GIFT)- சர்வதேச நிதி தொழில்நுட்ப மையத்தில்(IFSC), உலகத்தரம் வாய்ந்த நிதி தொழில்நுட்ப மையம் உருவாக்க மத்திய அரசு உதவும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில், முதலீட்டாளர் சாசனம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
சூரிய மின்சக்தி நிறுவனத்துக்கு ரூ.1000 கோடி:
மரபுசாரா எரிசக்தி துறையை மேலும் ஊக்குவிக்க, இந்திய சூரிய மின்சக்தி நிறுவனத்துக்கு கூடுதல் மூலதன தொகையாக ரூ.1000 கோடியும், இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி முகமைக்கு ரூ.1,500 கோடியும் மத்திய அரசு வழங்கும் எனவும் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693901
(Release ID: 1694102)
Visitor Counter : 332