சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொரோனா புதிய பாதிப்புகள்: 8 மாதங்களுக்குப் பிறகு 9102 ஆக சரிவு

Posted On: 26 JAN 2021 11:18AM by PIB Chennai

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மேலும் ஒரு மைல்கல் சாதனையைப் படைத்துள்ளது. அன்றாட புதிய பாதிப்புகள் 237 நாட்களுக்குப் பிறகு வெகுவாக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 9102 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. முன்னதாக கடந்த 2020 ஜூன் 4-ஆம் தேதி நாளொன்றுக்கு புதிய பாதிப்புகள் 9304 ஆக இருந்தது.

8 மாதங்களுக்குப் பிறகு நாளொன்றுக்கு  நாட்டில் உயிரிழப்போரின் எண்ணிக்கை 120 க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 117 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்தியாவில், கொரோனா நோய் தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,77,266 ஆகக் குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் வெறும் 1.66 சதவீதமாகும்.

 

10 லட்சம் மக்கள் தொகை அளவீட்டில் பார்த்தால் இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை உலக அளவில் மிகவும் குறைவு (128). ஜெர்மனி, ரஷ்யா, பிரேசில், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. இதேபோல் 10 லட்சம் மக்கள் தொகையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பும் உலகளவில் குறைவாகவே (7,736) உள்ளது.

இன்று (ஜனவரி 26, 2021) காலை 8 மணி வரை, தமிழகத்தில் 69,027 பேர் உட்பட, நாடு முழுவதும்  20,23,809 பேருக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 7,764 முகாம்களில் 4,08,305 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 36,378 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

1.03 கோடி பேர் (1,03,45,985) இதுவரை குணமடைந்துள்ள நிலையில்குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96.90 சதவீதமாக உயர்ந்துள்ளது.

குணமடைந்தோருக்கும், சிகிச்சை பெறுவோருக்குமான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து, தற்போது 1,01,68,719 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 15,901 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொடர்ந்து கேரளாவில் அதிகபட்சமாக 5,606 பேரும், மகாராஷ்டிராவில் 3,080 பேரும், அதைத்தொடர்ந்து கர்நாடகாவில் 1,036 பேரும் ஒரே நாளில் புதிதாக குணமடைந்துள்ளனர்.

நேற்று கேரளாவில் 3,361 பேரும், மகாராஷ்டிராவில் 1,842 பேரும்தமிழகத்தில் 540 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692463

**********************



(Release ID: 1692487) Visitor Counter : 172