சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இதுவரை சுமார் 16 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி

இடுகை இடப்பட்ட நாள்: 24 JAN 2021 11:08AM by PIB Chennai

கொவிட் -19 தடுப்பூசி, இன்று காலை 8 மணி வரை சுமார் 16 லட்சம் பேருக்கு (15,82,201) போடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 2 லட்சம் பேருக்கு (1,91,609) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியாவில், கொவிட்-19 தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட 6 நாளில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை அதிகம். 10 லட்சம் தடுப்பூசி போட இங்கிலாந்துக்கு 18 நாட்களும், அமெரிக்காவுக்கு 10 நாட்களும் ஆனது.

மத்திய அரசின் தீவிர நடவடிக்கையால் தினசரி கொவிட் பாதிப்பும், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்தியாவில் இன்று  1,84,408 பேர் கொவிட் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பில் இவர்கள் 1.73 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில், 15,948 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் சிகிச்சை பெறுபவர்களில் 75 சதவீதம் பேர் கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்.

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  10,316,786. இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 96.83 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்,14,849 பேருக்கு, புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 155 பேர் உயிரழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691794

**********************


(வெளியீட்டு அடையாள எண்: 1691833) வருகையாளர் எண்ணிக்கை : 219
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Malayalam