பிரதமர் அலுவலகம்

சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 21 JAN 2021 8:10PM by PIB Chennai

புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“@SerumInstIndia-வில் நடந்த துரதிர்ஷ்டவசமான தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் துயருற்றேன். இந்த சோகமான நேரத்தில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைந்து குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்,” என்று டிவிட்டர் பதிவொன்றில் பிரதமர் கூறியுள்ளார்.

**********************


(Release ID: 1691037) Visitor Counter : 162