சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இன்று காலை 7 மணி வரை 8 இலட்சத்திற்கும் அதிகமான மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகள்

Posted On: 21 JAN 2021 10:48AM by PIB Chennai

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,92,308 ஆக பதிவாகியுள்ளது. இது மொத்த பாதிப்பில் வெறும் 1.81 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் தற்போதைய மொத்த பாதிப்பில் 4,893 குறைந்துள்ளது.

தேசிய அளவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவதையடுத்து, இந்தியாவின் மக்கள் தொகையில் 10 லட்சம் பேரில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, 17 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில், தேசிய அளவைவிட குறைவாக உள்ளது. இந்தியாவில் 10 லட்சம் மக்கள் தொகையில் ஏற்பட்ட பாதிப்பு 7,689 ஆக பதிவாகியுள்ளது.

நாட்டில் தற்போது சிகிச்சை பெறுபவர்களில் 73 சதவீதத்தினர் கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இன்று காலை 7 மணி வரை, தமிழகத்தில் 33,670 பேர் உட்பட, நாட்டில் மொத்தம் 8,06,484 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,398 அமர்வுகளில் 1,31,649 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 14,118 அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 19,965 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 1,02,65,706 பேர் குணமடைந்துள்ள நிலையில்குணமடைந்தவர்களின் வீதம் 96.75 சதவீதமாக உயர்ந்துள்ளது.

புதிதாக குணமடைந்தவர்களில் 87.06 சதவீதத்தினர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

கேரளாவில் அதிகபட்சமாக 7,364 பேர் ஒரே நாளில் புதிதாகக் குணமடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 4,589 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கேரளாவில் 6,815 பேரும், மகாராஷ்டிராவில் 3,015 பேரும், சட்டீஸ்கரில் 594 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஏற்பட்ட 151 உயிரிழப்புகளில் 83.44 சதவீதம், 8 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் பதிவாகியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690691

*****

(Release ID: 1690691)



(Release ID: 1690823) Visitor Counter : 181