பிரதமர் அலுவலகம்

குரு கோவிந் சிங் கொள்கையால் ஊக்கம் பெற்று நாடு முன்னோக்கிச் செல்கிறது : பிரதமர் திரு. நரேந்திர மோடி

Posted On: 20 JAN 2021 3:29PM by PIB Chennai

தற்போதைய அரசின் கீழ், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் வேகமாக முன்னேறி வருகிறது என்றும் உத்தரப் பிரதேசத்தில் மிகவும் ஏழ்மையானவர்களுக்கு இது உதவியுள்ளது என்றும் பிரதமர் கூறியுள்ளார். பிரதமரின் கிராம வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு லட்சம் பயனாளிகளுக்கு காணொலிக் காட்சி மூலம் இன்று நிதி வழங்கிய பின், பிரதமர்  இவ்வாறு கூறினார்.   

தற்சார்பு இந்தியா, நாட்டு மக்களின் தன்னம்பிக்கையுடன் நேரடியாக சம்பந்தப்பட்டது எனவும், ஒருவரின் சொந்த வீடுதான், ஒருவரின் தன்னம்பிக்கையை பல மடங்கு அதிகரிக்கிறது என பிரதமர் கூறினார்சொந்த வீடு, வாழ்க்கையில் உறுதியையும்ஏழ்மையில் இருந்து விடுபடும் நம்பிக்கையையும்  கொண்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

முந்தைய ஆட்சிகளின் போது, சொந்த வீடு கட்டுவதில் அரசு உதவும் என்ற நம்பிக்கை ஏழைகளுக்கு இல்லை என்பதை பிரதமர் நினைவு படுத்தினார்முந்தைய திட்டங்களில் கட்டப்பட்ட வீடுகளின் தரமும் நன்றாக இல்லை என அவர் தெரிவித்தார். தவறான கொள்கைகளின் சுமைகளை, ஏழைகள் சந்திக்க வேண்டியிருந்தது என பிரதமர் கூறினார்இதை கருத்தில் கொண்டுதான், 75வது சுதந்திர தினத்துக்கு முன், ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் வீடு வழங்க பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் தொடங்கப்பட்டது. சமீப காலங்களில் கிராமப் பகுதிகளில் 2 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளனபிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 1.25 கோடி வீடுகள், மத்திய அரசின் ரூ.1.5 லட்சம் கோடி பங்களிப்புடன் கட்டப்படுகின்றன.

உத்தரப் பிரதேசத்தில் முந்தைய அரசிடமிருந்து, இத்திட்டத்துக்கு போதிய ஆதரவு இல்லை என்பதை பிரதமர் நினைவு படுத்தினார்உத்தரப் பிரதேசத்தில் 22 லட்சம் கிராமப்புற வீடுகள் கட்டப்படவுள்ளன. இதில் 21.5 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 14.5 லட்சம் குடும்பங்கள், இந்த ஆட்சியின் கீழ் ஏற்கனவே வீடுகள் பெற்றுள்ளன.

******



(Release ID: 1690409) Visitor Counter : 120