பிரதமர் அலுவலகம்

திரு உஸ்தாத் குலாம் முஸ்தஃபா கான் ஸஹாபின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 17 JAN 2021 8:11PM by PIB Chennai

திரு உஸ்தாத் குலாம் முஸ்தஃபா கான் ஸஹாபின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “திரு உஸ்தாத் குலாம் முஸ்தஃபா கான் ஸஹாபின் மறைவு நமது கலைத்துறையில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. போற்றத்தக்க இசைக் கலைஞராகவும், படைப்பாற்றலில் பலம் வாய்ந்தவராகவும் விளங்கிய அவரது படைப்புகள் தலைமுறையைத் தாண்டி மக்களைச் சென்றடைந்தது. அவரது குடும்பத்தாருக்கும் அபிமானிகளுக்கும் எனது இரங்கல்கள்”, என்று தெரிவித்துள்ளார்.

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1689503) வருகையாளர் எண்ணிக்கை : 153