திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

பிஎம்கேவிஒய் 3.0 திறன் வளர்த்தலை தொலைதூர கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு எடுத்து செல்லும்: டாக்டர் மகேந்திர நாத் பாண்டே

प्रविष्टि तिथि: 15 JAN 2021 6:10PM by PIB Chennai

இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கக்கூடிய திறமைகளை தந்து அதிகாரமளிப்பதற்கான பிரதமரின் கௌஷல் விகாஸ் திட்டம் 3.0-வை மத்திய திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் அமைச்சகம் இன்று தொடங்கியது.

இதன் மூலம், நாடு முழுவதுமுள்ள சுமார் 600 மாவட்டங்களில் 300-க்கும் மேற்பட்ட திறன்வளர்த்தல் பயிற்சி படிப்புகள் இளைஞர்களுக்கு கிடைக்கும்.

பிரதமரின் கௌஷல் விகாஸ் திட்டம் 3.0-வை தொடங்கி வைத்து பேசிய மத்திய திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் இணை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே, பிஎம்கேவிஒய் 3.0 திறன் வளர்த்தலை நாட்டின் தொலைதூர கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு எடுத்து செல்லும் என்று கூறினார்.

காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மாவட்ட அளவில் திறன் வளர்த்தல் சூழலியலை மேம்படுத்துவதன் மூலம் ‘உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கம்’ மற்றும் ‘தற்சார்பு இந்தியா’ ஆகிய இயக்கங்களின் லட்சியங்களை அடைய முடியும் என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688836

                                                                         -----


(रिलीज़ आईडी: 1688950) आगंतुक पटल : 339
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Urdu , Marathi , Gujarati , Odia , Kannada