ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் : ரூ.484 கோடிக்கு விற்பனை செய்து சாதனை

Posted On: 14 JAN 2021 3:27PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள பிரதமரின் மக்கள் மருந்தகங்கள்இந்த நிதியாண்டில் ரூ.484 கோடி அளவுக்கு மருந்துகளை விற்று சாதனை படைத்துள்ளன

நாடு முழுவதும் உள்ள,  7064 பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகங்களில், 2020-2021ம் நிதியாண்டில் (ஜனவரி 12ம் தேதி வரை) ரூ.484 கோடி மதிப்பிலான தரமான  மருந்துகள் விற்பனையாகியுள்ளனஇது கடந்தாண்டு இதே கால விற்பனையைவிட 60 சதவீதம் அதிகம். இது  நாட்டு மக்கள் தோரயமாக ரூ.3000 கோடி சேமிக்க வழிவகுத்துள்ளது. இதை மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் திரு சதானந்த கவுடா இன்று கர்நாடகாவில் அறிவித்தார்.

2019-2020ம் நிதியாண்டில், மக்கள் மருந்தகங்களுக்கு மத்திய அரசின் மானியம் ரூ.35.51 கோடி. மக்களுக்கு சேமிப்பு ரூ.2,600 கோடியாக இருந்ததுமத்திய அரசு செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும், மக்கள் ரூ.74 சேமிக்க வழி செய்துள்ளது. இது பல மடங்கு பலனை அளித்துள்ளது என திரு சதானந்த கவுடா கூறினார்.

பெண்களின் மேம்பாட்டுக்கான நடவடிக்கையாக, இதுவரை 10 கோடிசுவிதாநாப்கின்கள் ரூ.1க்கு விற்கப்பட்டுள்ளன. ரூ.3.6 கோடி மதிப்பில், சுவிதா நாப்கின்கள் வாங்க 2020 டிசம்பரில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. 30 கோடி சுவிதா நாப்கின்களுக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688524

-----(Release ID: 1688579) Visitor Counter : 243