நித்தி ஆயோக்

தேசிய இளைஞர் தினத்தை ஒட்டி அடல் ஆய்வக கையேட்டை அடல் புதுமை இயக்கம் வெளியிட்டது

Posted On: 12 JAN 2021 7:16PM by PIB Chennai

அடல் ஆய்வகங்கள் மற்றும் தற்சார்பு இந்தியாவை நோக்கிய அவற்றின் பயணம் குறித்த விரிவான செயல்பாட்டு வழிமுறைகளை எடுத்துரைக்கும் அடல் ஆய்வக கையேட்டை அடல் புதுமை இயக்கம், நிதி ஆயோக், இன்று வெளியிட்டது.

தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை ஒட்டி அவரை கவுரவிக்கும் விதமாக இந்த கையேடு வெளியிடப்பட்டது. நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களின் பங்கு குறித்து தமது வாழ்நாள் முழுதும் சுவாமி விவேகானந்தர் பேசிவந்தார்.

அடல் ஆய்வக கையேடு 2.0 என்னும் பெயரிடப்பட்ட இந்த புத்தகம், அடல் புதுமை இயக்கத்தின் முன்னணி திட்டமான அடல் ஆய்வகங்களின் அமைப்பு ரீதியான தகவல்கள், தேர்வு முறை, உருவாக்கம் மற்றும் விழாக்கள் குறித்த செயல்முறை வழிகாட்டுதலை வழங்குகிறது.

https://aim.gov.in/pdf/ATL_Handbook_2021.pdf என்னும் இணைய முகவரியில் இந்த கையேட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

**********************(Release ID: 1688077) Visitor Counter : 32