பாதுகாப்பு அமைச்சகம்

அடல் சுரங்கப்பாதை பற்றிய இணையகருத்தரங்கு: பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடக்கம்

Posted On: 11 JAN 2021 4:18PM by PIB Chennai

இமாச்சல் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட அடல் சுரங்கப் பாதையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், இதன் மூலம் ஐஐடிக்கள், ன்ஐடிக்கள் மற்றும் இதர தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன் அடைவதற்காகவும், அடல் சுரங்கப்பாதை பற்றிய இணையக் கருத்தரங்கை எல்லை சாலைகள் அமைப்பு நடத்தியது.

இந்த ஒரு நாள் இணையக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்த, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், தொழில்நுட்ப சவால்கள் மற்றும் கொவிட் கட்டுபாடுகளுக்கு இடையே, பொறியியல் அற்புதம் என அழைக்கப்படும் அடல் சுரங்கப்பாதை கட்டிய எல்லை சாலைகள் அமைப்பின் பொறியாளர்களைப் பாராட்டினார்.  வெளிநாட்டு பொறியாளர்களுக்கே மிகப் பெரிய சவாலாக இருந்த, செரி நல்லா பகுதியில் இருந்த குறைபாட்டு இடையூறை, நமது பொறியாளர்கள் சரிசெய்தனர் என பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறினார்.  அடல் சுரங்கப்பாதை போன்ற பெரிய கட்டுமானம் செங்கல் மட்டும் கலவையால் மட்டும் உருவாக்கப்படவில்லை, தேசிய கவுரவம் என்ற உணர்வுடன் கட்டப்பட்டதுதான் மிக முக்கியமான விஷயம் என அவர் கூறினார்.  இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் கடந்தகால சாதனைகள் பலவற்றையும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நினைவு கூறினார். பல விஷயங்களில் அவர்கள் எப்போதும் தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர் என அவர் கூறினார். 

மூவாயிரம் மீட்டர் உயரத்துக்கு மேலே, கட்டப்பட்ட உலகின் மிகப் பெரிய சுரங்கப்பாதை (9.020கி.மீ) அமைத்ததில் உள்ள சவால்கள் மற்றம் அனுபவங்களை எடுத்து கூறும் ஆவணங்களின் தொகுப்பையும் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டார்.

  

**

(Release ID: 1687644)



(Release ID: 1687679) Visitor Counter : 170