சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் கொரோனா தொற்று குறைகிறது, கடந்த 24 மணி நேரத்தில் 16,311 புதிய பாதிப்புகள்

Posted On: 11 JAN 2021 11:02AM by PIB Chennai
  • கடந்த பல நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்றின் புதிய பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 16,311 பேர் மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • நாளொன்றில் ஏற்படும் உயிரிழப்புகளும் நாட்டில் பெருமளவு குறைந்துள்ளது. 229 நாட்களுக்குப் பிறகு ஒரு நாளில் 170-க்கும் குறைவான பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
  • இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2.25 இலட்சமாக (2,22,526) உள்ளது. இது மொத்த பாதிப்பில் வெறும் 2.13 சதவீதமாகும்.
  • கடந்த 24 மணி நேரத்தில் 16,959 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
  • நாட்டில் இதுவரை மொத்தம் 1,00,92,909 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெற்று வருவோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து 99 இலட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது (98,70,383).
  • குணமடைந்தவர்களின் வீதம் 96.43 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது உலகளவில் மிகவும் அதிகமாகும்
  • புதிதாக குணமடைந்தவர்களில் 78.56 சதவீதத்தினர் 10 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக கேரளாவில் 4,659 பேரும், மகாராஷ்டிராவில் 2,302 பேரும், சத்தீஸ்கரில் 962 பேரும் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.
  • 80.25 சதவீத புதிய தொற்றுக்கள் 9 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் பதிவாகியுள்ளன. கேரளாவில் 4,545 பேரும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 3,558 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
  • கடந்த 24 மணிநேரத்தில் 161 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687572

************



(Release ID: 1687602) Visitor Counter : 163