சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கோவிட்-19 தடுப்பு மருந்து விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு டாக்டர். ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்கினார்
Posted On:
01 JAN 2021 5:14PM by PIB Chennai
கோவிட்-19 தடுப்பு மருந்து விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன் இன்று தலைமை தாங்கினார்,
நாடு முழுவதும் நாளை (2020 ஜனவரி 2) கோவிட்-19 தடுப்பு மருந்து விநியோக ஒத்திகை நடைபெற உள்ள நிலையில், தடுப்பு மருந்து வழங்கப்பட உள்ள இடங்களின் தயார்நிலை குறித்து டாக்டர். ஹர்ஷ் வர்தன் ஆய்வு செய்தார்.
நாளைய ஒத்திகை சுமூகமாக நடைபெறுவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சருக்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர். நிர்வாக மற்றும் மருத்துவ அலுவலர்களிடையே சிறப்பான மற்றும் செயல்மிகு ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்று டாக்டர். ஹர்ஷ் வர்தன் வலியுறுத்தினார்.
“ஒத்திகை போல் இல்லாமல், உண்மையான தடுப்பு மருந்து விநியோக நடவடிக்கையாக இருக்கும் வகையில் சிறு விஷயங்களிலும் கவனம் செலுத்தி நாம் முயற்சிப்போம்,” என்று அலுவலர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்டு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் பகிரப்பட்டுள்ள விதிமுறைகளைத் தவறாமல் பின்பற்றுமாறு ஒவ்வொரு அலுவலரையும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685394
---
(Release ID: 1685453)
Visitor Counter : 238