சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 தடுப்பூசி அறிமுகப் பணிக்குத் தயாராகுமாறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை கேட்டுக் கொண்டுள்ளது மத்திய அரசு : அனைத்து மாநிலங்களிலும் ஜனவரி 2ஆம் தேதி ஒத்திகை

Posted On: 31 DEC 2020 2:33PM by PIB Chennai

நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி அறிமுகம் செய்வதற்கான பணிகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன், தயார் நிலையை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கோவிட்-19 தடுப்பூசி ஒத்திகை இடங்களில், தயார் நிலை குறித்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை நிர்வாகிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் காணொலிக் காட்சி மூலம் இன்று ஆய்வு நடத்தினார்.  

அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கோவிட்-19 தடுப்பூசி நடைமுறைக்கான  ஒத்திகை ஜனவரி 2ஆம் தேதி சனிக்கிழமை மேற்கொள்ளப்படுகிறது. இது அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும், குறைந்தது மூன்று இடங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சில மாநிலங்களையும், போக்குவரத்து சிக்கல் உள்ள மாவட்டங்களையும் இந்த ஒத்திகைக்குப் பயன்படுத்த உள்ளது. ஒவ்வொரு பரிசோதனை இடத்திலும், பொறுப்பு மருத்துவ அதிகாரி, 25 பரிசோதனைப் பயனாளிகளை (சுகாதாரப் பணியாளர்களை) அடையாளம் காண வேண்டும். இவர்களின் விவரங்கள் கோ-வின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என அனைத்து மாநிலங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

கோவிட்-19 தடுப்பூசி அறிமுகம் செய்வதற்கான இந்த ஒத்திகையின் நோக்கம், கோவிட்-19 தடுப்பூசி அமலாக்கத்தின் போது சந்திக்கும் பிரச்சினைகளை அடையாளம் காண்பது தான்.  இது, தடுப்பூசித் திட்ட நிர்வாகிகளுக்கும் நம்பிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட் தடுப்பூசி போடும் பணிக்காக 96,000 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685048

**********************



(Release ID: 1685138) Visitor Counter : 265