பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

பாரதீப் துறைமுகத்தை மேம்படுத்த அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 30 DEC 2020 3:51PM by PIB Chennai

பாரதீப் துறைமுகத்தில், மேற்கு கப்பல்துறை உள்பட உள்கட்டமைப்பு வசதிகளை பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ஆழப்படுத்தவும், மேம்படுத்தவும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.3,004.63 கோடி மதிப்பீட்டில் மிகப் பெரிய கப்பல்களை கையாளும் விதத்தில் இந்த ஆழப்படுத்துதல் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின் மூலம் பாரதீப் துறைமுகத்தில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, நிலக்கரி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி சிறப்பான முறையில் நடைபெறுவதோடு அதற்கான செலவும் குறையும்.

மேலும் பாரதீப் துறைமுகம் உள்ள பகுதியில் தொழில் பொருளாதாரம் மேம்படுவதோடு, வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் பாரதீப் துறைமுக பொறுப்புக் கழகம் இந்தியாவின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684632

-----

 


(Release ID: 1684740) Visitor Counter : 266