பிரதமர் அலுவலகம்

நியூ பாபூர் - நியூ குர்ஜா சரக்கு ரயில் பாதை மற்றும் கிழக்கத்திய பிரத்யேக சரக்கு போக்குவரத்து பெரு வழித்தடத்தின் கட்டுப்பாட்டு மையத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்


உள்கட்டமைப்பு மேம்பாடு அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்: பிரதமர்

Posted On: 29 DEC 2020 2:21PM by PIB Chennai

நியூ பாபூர் - நியூ குர்ஜா சரக்கு ரயில் பாதை மற்றும் கிழக்கத்திய பிரத்யேக சரக்கு போக்குவரத்து பெரு வழித்தடத்தின் கட்டுப்பாட்டு மையத்தை பிரதமர்  திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நவீன ரயில் கட்டமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை பார்க்கும்போது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்குர்ஜா-பாபூர் சரக்கு வழித்தடத்தில் முதல் சரக்கு ரயில் ஓடும் போது, தற்சார்பு இந்தியா குரலை நம்மால் கேட்க முடிகிறது என அவர் கூறினார்பிரயாக் ராஜ் கட்டுப்பாட்டு மையம், நவீன கட்டுபாட்டு மையங்களில் ஒன்று எனவும், இது புதிய இந்தியாவின் புதிய வலிமையின் அடையாளமாக உள்ளது எனவும்  அவர் கூறினார்.

எந்த ஒரு நாட்டுக்கும் உள்கட்டமைப்பு மிகப் பெரிய பலம் என பிரதமர் கூறினார். மிகப் பெரிய பொருளாதார சக்தியாக உருவாகும் பாதை நோக்கி நாடு வேகமாக சென்று கொண்டிருப்பதாகவும் சிறந்த இணைப்பு நாட்டின் முன்னுரிமையாக உள்ளது எனவும் அவர் கூறினார்இதை மனதில் வைத்துதான், கடந்த 6 ஆண்டுகளாக, நவீன இணைப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் அரசு செயல்பட்டு வருகிறதுநெடுஞ்சாலை, ரயில்வே, விமானப் போக்குவரத்து, நீர்வழி போக்குவரத்து, தகவல் தொடர்பு என்ற 5 அம்சங்களில் அரசு கவனம் செலுத்துகிறது என அவர் கூறினார்இந்த நோக்கில், இன்று தொடங்கப்பட்டுள்ள, மிகப் பெரிய கிழக்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்து வழித்தடம் மிகப் பெரிய நடவடிக்கை என அவர் கூறினார்.

இது போன்ற பிரத்யக சரக்கு ரயில் பாதை அவசியம் என பிரதமர் வலியுறுத்தினார்மக்கள் தொகை மற்றும் பொருளாதாரம் வளர்வதால், சரக்கு போக்குவரத்துக்கான தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது என அவர் கூறினார்பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் ஒரே பாதையில் செல்வதால், சரக்கு ரயிலின் வேகம் குறைவாக உள்ளதுசரக்கு ரயிலின் வேகம் குறைவாக இருக்கும்போது, பல தடைகள் ஏற்பட்டு, போக்குவரத்து செலவு அதிகமாகின்றது.  விலை அதிகமாக இருந்தால், நமது தயாரிப்புகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் போட்டியை இழக்கும்இந்த நிலையை மாற்றுவதற்காகத்தான் பிரத்யேக சரக்கு ரயில் பாதை திட்டமிடப்பட்டது. ஆரம்பத்தில் 2 பிரத்யேக சரக்கு ரயில் பாதை திட்டமிடப்பட்டதுலூதியானாவிலிருந்து தன்குனி வரை கிழக்கத்திய பிரத்யேக சரக்கு வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தில் நிலக்கரி சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள், தொழில் நகரங்கள் உள்ளன. இதற்காக துணை பாதைகளும் அமைக்கப்படுகின்றனமேற்கத்திய பிரத்யேக சரக்கு வழித்தடம் ஜவஹர்லால் நேரு துறைமுகத்திலிருந்து தாத்ரி வரை உள்ளது. இந்த வழித்தடத்தில்  முந்ரா, கண்ட்லா, பிபாவாவ், தாவ்ரி மற்றும் ஹசிரா போன்ற துறைமுகங்களுக்கு துணைப் பாதைகள் மூலம் சேவை அளிக்கப்படும்இந்த இரு சரக்கு வழித்தடங்களையும் சுற்றி, தில்லி-மும்பை  மற்றும் அமிர்தசரஸ்-கொல்கத்தா தொழில் வளாகங்கள் உருவாக்கப்படுகின்றனஇதே போல், வடக்கிலிருந்து தெற்குக்கும், கிழக்கிலிருந்து மேற்குக்கும்  பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் அமைக்க திட்டமிடப்படுகிறது என அவர் கூறினார்.

இது போன்ற பிரத்யேக சரக்கு ரயில் பாதைகள் மூலம், பயணிகள் ரயில் தாமதமாகும் பிரச்னைகளும் தீர்க்கப்படும் என பிரதமர் கூறினார்சரக்கு ரயிலின் வேகம் 3 மடங்கு அதிகரிப்பதன் காரணமாக, சரக்கு கொண்டு செல்லப்படும் அளவை 2 மடங்கு உயர்த்த முடியும்சரக்கு ரயில்கள் சரியான நேரத்தில் வரும்போது, நமது சரக்கு ரயில் போக்குவரத்து இன்னும் மலிவாகும். நமது சரக்குகள் விலை மலிவாக இருக்கும்போது, நமது ஏற்றுமதிக்கு இது பயனுள்ளதாக இருக்கும்இது நல்ல வர்த்தக சூழலை ஏற்படுத்தும், தொழிலை எளிதாக மேற்கொள்வது அதிகரிக்கும், முதலீட்டுக்கு இந்தியா சிறந்த நாடாக மாறும் மற்றும் சுய வேலை வாய்ப்புக்கு பல புதிய வாய்ப்புகள் உருவாக்கும்.

இந்த பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்தால், தொழில்துறையினர், வர்த்தகர்கள், விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் உட்பட ஒவ்வொருவரும் பயனடையவுள்ளனர் என பிரதமர் கூறினார்இந்த சரக்கு வழித்தடம், தொழில்ரீதியாக பின்தங்கியிருக்கும் கிழக்கு இந்தியாவை ஊக்குவிக்கும்இந்த சரக்கு வழித்தடத்தில் 60 சதவீதம் உத்தரபிரதேசத்தில் உள்ளது என அவர் கூறினார். இதனால், உத்தரப் பிரதேசம் அதிகளவிலான தொழிற்சாலைகளை ஈர்க்கும்இந்த பிரத்யேக சரக்கு வழித்தடம் காரணமாக, விவசாயிகள் ரயில் பயனடையும் என அவர் கூறினார். விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை, ரயில் மூலம் நாடு முழுவதும் உள்ள எந்த மிகப் பெரிய சந்தைக்கும் பாதுகாப்பாகவும், குறைந்த செலவிலும்  அனுப்ப முடியும்இந்த சரக்கு வழித்தடம் மூலம், விவசாயிகளின் உற்பத்தி பொருட்கள் விரைவாக சென்றடையும். விவசாயிகள் ரயில் காரணமாக, உத்தரப் பிரதேசத்தில் ஏராளமான கிடங்குகள் மற்றும் குளிர்பதன கிடங்குகள் வந்துள்ளன.

கடந்த காலத்தில், இந்த பிரத்யேக சரக்கு ரயில் பாதை திட்டம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. 2014ம் ஆண்டு வரை ஒரு கி.மீ தூரம் கூட சரக்கு ரயில் பாதை அமைக்கப்படவில்லை. 2014ம் ஆண்டுக்கு பின்புதான், அனைத்து தரப்பினருடனும் தொடர்ச்சியாக ஆலோசித்து 1100 கி.மீ தூரத்துக்கு இந்த பணிகள் சில மாதங்களில் முடிவடைந்தது. முந்தைய ஆட்சியாளர்களின் மனநிலை ரயில் பாதையை அதிகரிக்காமல், ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலேயே இருந்தது. ரயில்வேயை நவீனமாக்க அதிக முதலீடு செய்யப்படவில்லைதனி ரயில்வே பட்ஜெட்டை நீக்கியதால், இந்த நிலை மாற்றப்பட்டு, ரயில்பாதை அமைப்பதில் முதலீடு செய்யப்பட்டது. ரயில்களின் மின்மயமாக்கத்தை அதிகரிப்பதிலும், ஆளில்லா ரயில்வே கிராஸிங்கை அகற்றுவதிலும் இந்த அரசு கவனம் செலுத்தியதாக பிரதமர் திரு நரேந்திர மோடி  கூறினார்.

சுத்தம், உணவு பொருட்கள் தரம் மேம்பாடு மற்றும் இதர வசதிகள் என ரயில்வேயின் ஒவ்வொரு மட்டத்திலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என பிரதமர் கூறினார்.   ரயில்வே தொடர்பான உற்பத்தியில், தன்னிறைவு என்ற முக்கிய சாதனை  படைக்கப்பட்டதாக அவர் கூறினார். இந்தியா தற்போது நவீன ரயில்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதாக அவர் கூறினார். மின்சார ரயில்கள் தயாரிப்பில் வாரணாசி முக்கிய மையமாக மாறியுள்ளது. ரேபரேலியில் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டதாக வைத்திருக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். நாட்டின் உள்கட்டமைப்பு, பல தலைமுறைகளுக்கு பயனளிப்பதாக இருக்க வேண்டும், 5 ஆண்டு அரசியலுக்காக இருக்க கூடாது எனவும் அவர் கூறினார்அரசியல் கட்சிகள் போட்டி போட வேண்டும் என்றால், உள்கட்டமைப்பின் தரத்தில் போட்டி இருக்க வேண்டும், வேகத்திலும், அளவிலும் போட்டியிட வேண்டும்போராட்டங்களின் போது, பொது சொத்துக்களை சேதப்படுத்தக் கூடாது என அவர் அறிவுறுத்தினார்ஒருவர் ஜனநாயக உரிமையை கோரும் அதே வேளையில், அவர் நாட்டுக்கான தனது கடமையை மறக்க கூடாது என பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.

*****************



(Release ID: 1684407) Visitor Counter : 192