சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொரோனா தடுப்பு மருந்து ஒத்திகை நான்கு மாநிலங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது

Posted On: 29 DEC 2020 3:08PM by PIB Chennai

அசாம், ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் கொவிட்-19 தடுப்பு மருந்து ஒத்திகை நடவடிக்கையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெற்றிகரமாக மேற்கொண்டது.

இந்த இரண்டு நாள் ஒத்திகை நேற்று மற்றும் இன்று (2020 டிசம்பர் 28 மற்றும் 29) நடைபெற்றது. பல்வேறு நோய்களுக்கு ஏற்கனவே தடுப்பு மருந்து வழங்கிய அனுபவத்தின் அடிப்படையில் இந்த இரு தினங்களில் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.

சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்  போன்ற முன்னுரிமை குழுவினர்களுக்கு தடுப்பு மருந்து வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட மற்றும் வட்ட அளவிலான பணிக் குழுக்கள் கொரோனா தடுப்பு மருந்தை வழங்கும் பணிக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

ஆந்திரப் பிரதேசத்திலுள்ள கிருஷ்ணா மாவட்டம், குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மற்றும் காந்திநகர் மாவட்டங்கள், பஞ்சாபில் உள்ள லூதியானா மற்றும் ஷாகித் பகத்சிங் நகர், அசாமில் உள்ள சோனித்பூர் மற்றும் நல்பாரி மாவட்டங்களில் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684354

*****************(Release ID: 1684399) Visitor Counter : 17