சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

ஓட்டுனருக்கு அருகில் அமரும் பயணி இருக்கைக்கும் காற்றுப்பை அமைப்பதை கட்டாயமாக்குவது பற்றி பொதுமக்கள் கருத்துக் கேட்பு

Posted On: 29 DEC 2020 2:29PM by PIB Chennai

பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஓட்டுனருக்கு அருகில் முன் இருக்கையில் அமரும் பயணிக்கும் காற்றுப்பை வசதி அளிப்பதை கட்டாயமாக்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. புதிய ரக வாகனங்களுக்கு 2021 ஏப்ரல் 1-ஆம் தேதி முதலும், தற்போது உள்ள ரகங்களுக்கு 2021 ஜூன் 1-ஆம் தேதி முதலும் இந்த திட்டத்தை செயல்படுத்த கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை டிசம்பர் 28-ஆம் தேதி, அமைச்சகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அறிவிப்பு வெளியான 30 நாட்களில் இதுதொடர்பான பங்குதாரர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களையும் பின்னூட்டங்களையும் comments-morth[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684344

*****************



(Release ID: 1684387) Visitor Counter : 140