குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் பிரதமர் திரு பி.வி.நரசிம்மராவுக்கு, குடியரசுத் துணைத் தலைவர் புகழாரம்

Posted On: 27 DEC 2020 2:38PM by PIB Chennai

புத்தக வெளியீட்டு விழாவில், முன்னாள் பிரதமர் திரு. பி. வி. நரசிம்ம ராவுக்கு, குடியரசுத் துணைத்தலைவர் இன்று புகழாரம் சூட்டினார். அவர் எடுத்த தைரியமான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள், நாட்டின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த உதவியுள்ளன என அவர் கூறினார்.

மூத்த பத்திரிக்கையாளர் ஏ. கிருஷ்ணாராவ் எழுதிய ‘‘விப்லவ தபஸ்வி: பிவி’’ என்ற தெலுங்குப் புத்தகத்தை ஐதராபாத்தில் வெளியிட்ட குடியரசுத் துணைத் தலைவர் கூறுகையில், திரு.நரசிம்மராவ், பிரதமராகப் பதவியேற்ற போது நாடு கடும் பொருளாதார நெருக்கடியையும் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மையும் சந்தித்திருந்தது. 

ஆனால், திரு.நரசிம்மராவ், அரசியல் நிபுணர்களின் எதிர்பார்ப்புகளையும் மீறி, அவரது ஆட்சிக் காலத்தில் பல சவால்களுக்கு இடையே நாட்டைத் திறம்பட வழிநடத்தினார்.

முன்னாள் பிரதமர் திரு.நரசிம்மராவ், புத்திசாலித்தனத்தனமான நிர்வாகி என திரு.வெங்கையா நாயுடு கூறினார். அவரால் அமல்படுத்தப்பட்ட சில கொள்கைளுடன், ஒருவருக்கு உடன்பாடு இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனாலும், சில பரந்த நடவடிக்கைகள், நாட்டுக்கு நலனாக இருந்தன. உலக வர்த்தக அமைப்பில், இந்தியா நுழைய அவர்  வழி ஏற்படுத்தினார். .

உரிமங்களின் ராஜ்ஜியம் உட்பட பலவற்றை திரு.நரசிம்மராவ் அகற்றினார், வங்கிச் சீர்த்திருத்தங்களைக் கொண்டு வந்தார், மின்சாரத்தைத் தனியார் மயமாக்கினார், தொலைத் தொடர்புத்துறையை நவீனமாக்கினார் ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுத்தார், அந்நிய முதலீடுகளை ஈர்த்தார் என குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.  மேலும் அவர், வேளாண் துறையில் சீர்திருத்தங்களைத் தொடங்கினார். உணவு தானியப் போக்குவரத்தில் இருந்த கட்டுபாடுகளை அகற்றினார் என குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். 

அரசியலமைப்பில் செய்யப்பட்ட 73 மற்றும் 74வது சீர்திருத்தங்கள் மூலம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்னாள் பிரதமர் அதிகாரம் அளித்தார் என திரு.வெங்கையா நாயுடு நினைவு கூர்ந்தார்.  முன்னாள் பிரதமர் திரு.நரசிம்மராவ் பன்முக ஆளுமை கொண்டவர், சிறந்த அறிஞர், இலக்கியவாதிபன்மொழி அறிஞர் என  அவர் கூறினார். ஆனாலும், அவருக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என  திரு வெங்கையா நாயுடு தெரிவித்தார்.  

திரு. நரசிம்மராவ் பற்றி புத்தகம் எழுதியதற்காக திரு கிருஷ்ண ராவைப் பாராட்டிய திரு.வெங்கையா நாயுடு, இது போன்ற புத்தகங்களை இளைஞர்கள் படிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.  தலைசிறந்த ஆண்கள் மற்றும் பெண்கள் பற்றிய புத்தகங்கள், நினைவுச் சொற்பொழிவுகள் ஆகியவை மற்றவர்களை ஊக்குவிக்கும் என அவர் கூறினார். 

மாநிலங்களவை எம்.பி கே. கேசவ் ராவ், திரு. கிருஷ்ணா ராவ் மற்றும்  வெளியீட்டாளர்  திரு. ராகவேந்திர ராவ் ஆகியோர் உடன் இருந்தனர்.

**********************(Release ID: 1683988) Visitor Counter : 122