பாதுகாப்பு அமைச்சகம்

ஏரோ இந்தியா-21 நிகழ்ச்சிக்கான திட்டப்பணிகள் - அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆய்வு

Posted On: 23 DEC 2020 2:53PM by PIB Chennai

மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஏரோ இந்தியா-21 நிகழ்ச்சிக்கான திட்டப்பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார். கண்காட்சி குறித்த சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்றியும், வர்த்தகத்தை முன்னிறுத்தியும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர். பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த வருடக் கண்காட்சியை பொதுமக்கள் காணொலி வாயிலாகக் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்படும்.

விண்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் துறையில் உலக அளவில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா இடம் பெற வேண்டும் என்ற தீர்மானத்தைச் செயல்படுத்தும் வகையில் ஏரோ இந்தியா-21 கண்காட்சி அமையும் என்று அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பிரதமர் திரு.நரேந்திர மோடியின் கனவுத்திட்டமான தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த தொழில் நிறுவனங்களை உலக நாடுகள் இந்தியாவில் தொடங்குவது தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இந்தியாவில் உள்ள வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் உலக நாடுகளின் தலைவர்களும், தொழில்துறைத் தலைவர்களும் ஏரோ இந்தியா-21 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

கோவிட்-19 பரவலால் 2021 பிப்ரவரி மாதம் 3 முதல் 5-ஆம் தேதி வரை இந்தக் கண்காட்சியை நடத்துமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682937

*****************


(Release ID: 1682995) Visitor Counter : 219