பிரதமர் அலுவலகம்

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-இல் பிரதமர் தொடக்கவுரை ஆற்றுகிறார்

Posted On: 20 DEC 2020 6:38PM by PIB Chennai

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020,  டிசம்பர் 22ஆம் தேதி நடக்கிறது. இதில் அன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் துவக்கவுரை நிகழ்த்துகிறார். இந்த நிகழ்ச்சியில்  மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கலந்து கொள்கிறார்.

சமூகத்தில் அறிவியல் மனநிலையை வளர்க்கும் நோக்கத்துடன் மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம்  ஆகியவை விஞ்ஞான பாரதியுடன் இணைந்து இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை உருவாக்கியது. கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா, அறிவியல் தொழில் நுட்பத்தை வளர்க்கும் விழாவாக உள்ளது. மக்களை அறிவியலில் ஈடுபடுத்தவும், அறிவியலின் மகிழ்ச்சியைக் கொண்டாடவும், வாழ்க்கையை மேம்படுத்தும் தீர்வுகளை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவை எப்படி அளிக்கின்றன என்பதை அறிய வைப்பதே இதன் நோக்கம்விஞ்ஞான அறிவு, படைப்பாற்றல், விவேக சிந்தனை, பிரச்சினைகளைத் தீர்ப்பது, குழுவாகப் பணியாற்றுவது ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், இளைஞர்களிடம் 21ஆம் நூற்றாண்டுத் திறமைகளை வளர்ப்பதே இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-இன் இலக்கு ஆகும்அறிவியல் துறைகளில் படிப்பதற்கும், வேலை செய்வதற்கும் மாணவர்களை ஊக்குவிப்பதே இதன் நீண்டகால நோக்கம்.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682232

-----



(Release ID: 1682252) Visitor Counter : 197