இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

உடல் தகுதி இந்தியா 2வது சைக்கிள் போட்டிக்கு அமோக ஆதரவு: 1 வாரத்தில் சுமார் 13 லட்சம் பேர் பங்கேற்பு

Posted On: 20 DEC 2020 10:59AM by PIB Chennai

உடல் தகுதி இந்தியா இரண்டாவது சைக்கிள் போட்டிக்கு, நாடு முழுவதும் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.

இதை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ, சமூக ஊடகம் மூலம்  கடந்த 7ஆம் தேதி  தொடங்கி வைத்தார். இதில் நாடு முழுவதும் ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர். கடந்த 15ஆம் தேதி வரை , 12,69,695 பேர் பங்கேற்று 57,51,874 கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்தை நிறைவு செய்துள்ளனர்இவர்களில் 3,11,458 பேர் நேரு யுவ கேந்திர சங்கதனைச் சேர்ந்தவர்கள்; 4,14,354 பேர் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் (என்எஸ்எஸ்),  5,43,883 பேர் மற்றவர்கள்உடல் தகுதி சைக்கிள் போட்டிக்கு சமூக ஊடகத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. பொதுமக்களுடன், பிரபலங்களும் சைக்கிளில் செல்லும் படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்

இந்த நிகழ்ச்சி டிசம்பர் 31ஆம் தேதி வரை தொடரும். உடல் தகுதி இந்தியா இணையதளத்தில் (https://fitindia.gov.in/fit-india-cyclothon-2020/), மக்கள் பதிவு செய்து இந்த சைக்கிள் போட்டியில் பங்கு பெறலாம்தங்கள் விருப்பப்படி எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணம் செய்து, அந்தப் படங்கள் மற்றும் வீடியோக்களை  @FitIndiaOff சமூக ஊடகத்தில் #FitIndiaCyclothon and #NewIndiaFitIndia என்ற ஹேஸ்டாக்குடன் வெளியிடலாம்.

இந்த பிரம்மாண்ட சைக்கிள் போட்டி நிகழ்ச்சியில் மக்கள் பங்குபெறுவதை ஊக்குவிக்கும் வகையில் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ, ‘‘ உடலைத் தகுதியாக வைத்துக்கொள்ளவும், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும், சைக்கிளில் பயணிப்பது சிறந்த வழிடிசம்பர் 7ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் உடல் தகுதி இந்தியா 2வது சைக்கிள் போட்டிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். பிரதமர் திரு. நரேந்திர மோடி அழைப்பு விடுத்த உடல் தகுதி இந்தியா இயக்கத்தில் நாம் இணைவோம்’’ என கூறியுள்ளார்.

உடல் தகுதி இந்தியா முதல் சைக்கிள் போட்டி, கோவா தலைநகர் பனாஜியில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரால், கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வைக்கப்பட்டதுநாடு முழுவதும், மக்களை சைக்கிள் பயணத்தில் ஈடுபட வைக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் இது வரை 35 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.

                                                              -----



(Release ID: 1682196) Visitor Counter : 162