நிதி அமைச்சகம்

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான சீர்திருத்தங்கள் நிறைவேற்றம்: கூடுதலாக ரூ.16,728 கோடி நிதி பெற அனுமதி

Posted On: 20 DEC 2020 10:47AM by PIB Chennai

எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக இதுவரை தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதையடுத்து இந்த மாநிலங்களுக்குக் கூடுதலாக ரூ.16,728 கோடி நிதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் மைய சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் மாநிலங்கள் கூடுதல் கடன் பெறலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான சீர்திருத்தங்களை ஏற்படுத்த மாநிலங்களை ஊக்குவித்துள்ளது. இதன்படி தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் எளிதான வர்த்தகம் தொடர்பான சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ளன.

இதனால் கூடுதல் நிதியாக தமிழகத்திற்கு ரூ.4,813 கோடியும், ஆந்திரப்பிரதேசத்திற்கு ரூ. 2,525 கோடியும் , கர்நாடகாவிற்கு ரூ. 4,509  கோடியும், மத்தியப்பிரதேசத்திற்கு ரூ. 2,373 கோடியும், தெலங்கானாவிற்கு ரூ. 2,508 கோடியும் நிதி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் மாநிலப் பொருளாதாரத்தில் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என்பதால் இது தொடர்பாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் மாநிலங்களுக்குக் கூடுதல் கடன் வழங்கப்படும் என்று கடந்த மே மாதம் மத்திய அரசு முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682118

------


(Release ID: 1682189) Visitor Counter : 163