தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்தியத் திரைப்படத்துக்கு நமது அனிமேஷன் நிபுணர்கள் பணியாற்ற வேண்டிய நேரம் இது: திரு பிரகாஷ் ஜவடேகர்
प्रविष्टि तिथि:
16 DEC 2020 1:41PM by PIB Chennai
இந்திய திரைப்படத்துக்கு நமது அனிமேஷன் நிபுணர்கள் பணியாற்ற வேண்டிய நேரம் இது என சிஐஐ அமைப்பின் பிக் பிக்சர் (ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை) மாநாட்டில் உரையாற்றிய மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
சிஐஐ அமைப்பின் பிக் பிக்சர் (ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை) மாநாட்டில் திரு பிரகாஷ் ஜவடேகர் பேசியதாவது:
இந்த மாநாட்டை நடத்தும் சிஐஐ அமைப்புக்கு வாழ்த்துகள். தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு தனித்துவமான நாடாக இந்தியா உள்ளது. இது பொழுதுபோக்கு மற்றும் ஊடகத் தொழிலுக்கு மிகப்பெரிய வாய்ப்பை அளிக்கிறது. அனிமேஷன், விஷூவல் எபெக்ட்ஸ், விளையாட்டு மற்றும் காமிக்ஸ் (ஏவிஜிசி) துறை வளர்ந்து வருகிறது.
உலகளவிலான முன்னணி சினிமா தயாரிப்பாளர்களுக்கு நமது நிபுணர்கள் அனிமேஷன் உதவிகளை அளிக்கின்றனர். நமது அனிமேஷன் நிபுணர்கள், நமது இந்தியப் படங்களுக்கு பணியாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. அப்போதுதான் இந்தியத் திரைப்படங்களில் அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் பயன்பாடு அதிகரிக்கும்.
மும்பை இந்திய மையத்துடன் இணைந்து சிறப்பு மையத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. அதில் அனிமேஷன் பாடங்கள் கற்றுத் தரப்படும். ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் தொழில் முனைவோரை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.
2022ம் ஆண்டில் கேன்ஸ் திரைப்பட விழா 75வது ஆண்டை கொண்டாடுவதால், இந்தியா சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும். இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், 2021 ஜனவரியில் கோவாவில் நடைபெறும் 51வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681010
****************
(रिलीज़ आईडी: 1681210)
आगंतुक पटल : 284
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada