வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியாவின் வளர்ச்சியில் பங்குகொள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அமைச்சர் திரு பியூஷ் கோயல் அழைப்பு

Posted On: 15 DEC 2020 1:54PM by PIB Chennai

இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்கள், நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பான சிஐஐயின் பார்ட்நெர்ஷிப் உச்சி மாநாடு 2020-இல் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு பேசிய அவர், முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். எதிர்கால பொருளாதாரத் திட்டங்களை வலுப்படுத்தும் வகையில் சர்வதேச முதலீட்டாளர்களுக்கான வசதிகள் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

அந்நிய நேரடி முதலீடு தொடர்ந்து வளர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். “இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் கொவிட்-19 பெருந்தொற்று பரவலாக இருந்த காலகட்டத்தில் நமது அந்நிய நேரடி முதலீடு வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த ஏப்ரல்-செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் அந்நிய நேரடி முதலீடு வரத்து 40 பில்லியன் டாலராக இருந்தது, இது கடந்த ஆண்டை விட 13 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு உலகிலேயே மிகவும் கவர்ச்சிகரமான வரிச் சலுகைகளாக இந்திய வர்த்தகர்களுக்கு 22% வரியும் 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு தொடங்கிய தயாரிப்பு நிறுவனங்களுக்கு 15 % வரியும் அறிவித்தோம்”, என்று அவர் கூறினார்.

 

இந்தியாவில் தொழில் துறைகள்  தொடங்குவதற்காக உற்பத்தியுடன் சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டம் போன்ற ஏராளமான புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். பெருந்தொற்று காலத்திற்கு முன்பு மத்திய, மாநில அரசுகள் முதலீட்டை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததையும், பெருந்தொற்றிலிருந்து மீளும் வகையிலும், பொருளாதாரத்தை மேம்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680751



(Release ID: 1680811) Visitor Counter : 169