சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
கொரோனா பெருந்தொற்றின் போது விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் குறும்படங்கள் பெரும் பங்காற்றின: அமைச்சர் திரு நக்வி
Posted On:
14 DEC 2020 2:55PM by PIB Chennai
கொரோனா பெருந்தொற்றின் போது அரசு, சமூகம், திரைப்படங்கள் மற்றும் ஊடகங்கள் ஆகியவை துணிவுடனும், உறுதியுடனும் எச்சரிக்கையுடனும் சிறப்பாக செயலாற்றின என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்.
விழிப்புணர்வை ஏற்படுத்தி நல்லதொரு செய்தியை மக்களிடத்தில் கொண்டு சென்ற குறும்படங்கள் நெருக்கடியின்போது முக்கிய பங்காற்றின என்று அவர் தெரிவித்தார்.
புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச கொரோனா வைரஸ் குறும்பட திருவிழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்றின் சவால்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைப்பதில் குறும்படங்கள் சிறப்பான பணியை செய்தன என்று அவர் கூறினார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர், புகழ்பெற்ற திரைப்பட பிரமுகர்கள், பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அறிஞர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கொரோனா வைரஸ் குறும்பட திருவிழாவை ஏற்பாடு செய்தவர்களை திரு ஜவடேகர் பாராட்டினார். 108 நாடுகளிலிருந்து 2,800 படங்கள் இதில் கலந்து கொள்வது குறித்து அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680538
----
(Release ID: 1680611)
Visitor Counter : 130