சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.6 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது

Posted On: 12 DEC 2020 12:26PM by PIB Chennai

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது, தற்போது 3.6 லட்சத்திற்கும்  குறைவானோர் (3,59,819) பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோயினால் பாதிக்கப்படுவோரை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் உயிரிழப்புகள் குறைந்து வருவதே தற்போதைய பாதிப்பின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணியாகும். நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 3.66 சதவீதத்தினர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 33,494 பேர் குணமடைந்துள்ளனர்.

தொடர்ந்து 15-வது நாளாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாட்டில் குணமடைந்தோரின் வீதம் 94.89-ஆக இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30,006 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை மொத்தம் 93,24,328 பேர் கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் மற்றும் தற்போது சிகிச்சை பெற்று வருவோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து, தற்போது 89,64,509-ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 442 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக 500-க்கும் குறைவாக பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680186

------


(Release ID: 1680206)