நிதி அமைச்சகம்

மாநிலங்களின் மூலதன செலவினங்களுக்கான சிறப்பு திட்டம்: 27 மாநிலங்களுக்கு ரூ. 9,879.61 கோடி ஒப்புதல்

Posted On: 12 DEC 2020 9:08AM by PIB Chennai

மாநிலங்களின் மூலதன செலவினங்களுக்கான சிறப்புத் திட்டத்தின் பயன்களை தமிழகம் தவிர நாட்டிலுள்ள மற்ற அனைத்து மாநிலங்களும் பெற்றுள்ளன. இந்தத் திட்டத்தை தற்சார்பு இந்தியா நலத் தொகுப்பின் ஒரு பகுதியாக  மத்திய நிதியமைச்சர் கடந்த அக்டோபர் மாதம்  அறிவித்திருந்தார்.

கொவிட்-19 பெருந்தொற்றால் வரி வருவாயில்  ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு மாநிலங்களின் மூலதன செலவினங்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு மாநிலங்களிடையே சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 27 மாநிலங்களுக்கு ரூ. 9,879.61 கோடி மூலதன செலவினங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே முதல் தவணையாக ரூ. 4,939.81 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சுகாதாரம், ஊரக மேம்பாடு, தண்ணீர் விநியோகம், நீர்ப்பாசனம், எரிசக்தி, போக்குவரத்து, கல்வி, நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மூலதன செலவினங்களுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680145

----


(Release ID: 1680204) Visitor Counter : 266