பிரதமர் அலுவலகம்
லட்சத்தீவின் தலைமை நிர்வாகி திரு தினேஷ்வர் ஷர்மாவின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
04 DEC 2020 4:32PM by PIB Chennai
லட்சத்தீவின் தலைமை நிர்வாகி திரு தினேஷ்வர் ஷர்மாவின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “லட்சத்தீவின் தலைமை நிர்வாகியான திரு தினேஷ்வர் ஷர்மா அவர்கள், இந்தியாவின் காவல்துறைக்கும், பாதுகாப்புக்கும் நிலையான பங்களிப்பை அளித்தார். அவரது காவல் பணியின் போது ஏராளமான தீவிரவாதத் தாக்குதல்களையும், கிளர்ச்சி நடவடிக்கைகளையும் அவர் எதிர்கொண்டார். அவரது மறைவினால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். அன்னாரது குடும்பத்திற்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி”, என்று தெரிவித்துள்ளார்.
------
(रिलीज़ आईडी: 1678359)
आगंतुक पटल : 185
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam