பிரதமர் அலுவலகம்
புரெவி புயலால் நிலவும் சூழல் குறித்து கேரள முதல்வருடன் பிரதமர் தொலைபேசி உரையாடல்
இடுகை இடப்பட்ட நாள்:
02 DEC 2020 8:11PM by PIB Chennai
புரெவி புயல் காரணமாக கேரளாவில் நிலவி வரும் சூழல் குறித்து கேரள முதல்வர் திரு பினராயி விஜயனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் உரையாடினார்.
"கேரள முதல்வர் திரு @vijayanpinarayi அவர்களுடன் புரெவி புயல் சின்னத்தால் அந்த மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்துப் பேசினேன். கேரளாவிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதியளித்தேன். புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிப்போரின் பாதுகாப்பு மற்றும் நலனிற்காகப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்," என்று டிவிட்டர் பதிவொன்றில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
**********************
(வெளியீட்டு அடையாள எண்: 1677817)
வருகையாளர் எண்ணிக்கை : 170
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam