பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

சர்வதேச எரிசக்தி தேவையின் வளர்ச்சியை இந்தியா முன்னெடுத்து செல்லும்: அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்

Posted On: 02 DEC 2020 1:40PM by PIB Chennai

கச்சா எண்ணெயின் நியாயமான மற்றும் பொறுப்பான விலை நிர்ணயித்தலை இந்தியா விரும்புவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று கூறினார்.

தற்சார்பு இந்தியா குறித்த சுவாராஜ்யா இணைய கருத்தரங்கில் பேசிய அவர், சர்வதேச எரிசக்தி தேவையின் வளர்ச்சியை இந்தியா முன்னெடுத்து செல்லும் என்று கூறினார்.

இணைய கருத்தரங்கில் மேலும் பேசிய அவர், ஒரு நிறுவனமே ஆதிக்கம் செலுத்தி வந்த காலம் மலையேறி விட்டதாகவும், நுகர்வோர்களின் கருத்துக்களை உற்பத்தியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இந்தியாவின் எரிசக்தி நுகர்வு 2040-ஆம் ஆண்டு வரை வருடத்துக்கு 3 சதவீதம் என்ற அளவில் உயரும்  என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

உலகின் முன்னணி பொருளாதாரங்களை விட இது வேகமான வளர்ச்சி என்று குறிப்பிட்ட திரு பிரதான், சர்வதேச மொத்த அடிப்படை எரிசக்தி தேவையில் இந்தியாவின் பங்கு 2040-ஆம் ஆண்டில் 11 சதவீதமாக இருக்கும் என்றார். வலுவான பொருளாதார வளர்ச்சியால் இது சாத்தியமாகும் என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677636

******

 

(Release ID: 1677636)


(Release ID: 1677677) Visitor Counter : 255